தமிழகத்தில் திமுக ஆட்சி குறித்து விமர்சித்த எஸ்பி வேலுமணி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒன்றரை வருடங்களில் எதுவுமே செய்யவில்லை. மக்கள் விரோத ஆட்சியாக இருக்கின்றது. நாட்டில் எது நடந்தாலும் கவலை இல்லை. ஸ்டாலினுக்கு விளம்பரம் தேடுவது மட்டும்தான் நோக்கமாக இருக்கின்றது. எங்கள் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். ஸ்டாலின் ஓபிஎஸ் உடன் சேர்ந்து அதிமுக அலுவலகத்தை அதிமுகவினரின் கோயிலை உதைத்துள்ளார். எடப்பாடி தலைமையில் இருக்கும் அதிமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறும் 2026 இல் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் . இதனை யாரும் தடுக்க முடியாது.
நாங்கள் கொண்டுவந்த திட்டத்தை எல்லாம் திமுக சுவாகா செய்கின்றார்கள். மின் கட்டணம் திமுக அரசு குறைக்கவில்லை என்றால் போராட்டத்தை இன்னும் தீவிரப் படுத்துவோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தலைமை நிலைய செயலாளரும் அதிமுக கட்சியின் சட்டமன்ற எஸ்பி வேலுமணி கோவையில் திமுகவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசினார்.