தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
அந்தவகையில் ஓமலூரில் அமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அவருடைய கனவு ஒரு போதும் பலிக்காது. மேலும் மக்களுக்கு சேவை செய்யும் அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.