Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினும், சேகர் பாபுவும்…. கோணிச் சாக்கை போட்டுட்டு…! தாறுமாறாக விமர்சித்த எச்.ராஜா …!!

கோவில்களில் இருப்பதையெல்லாம் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபும் கோணிச் சாக்கை போட்டுக்கொண்டு கஜினிமுகமது போல் சென்றதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, கோணிச்சாக்கை தோளில் போட்டுகொண்டு கோவில் கோவிலாக தங்கம் எடுக்க போனார்கள் இந்த திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினும், சேகர்பாபுவும். வேறு ஏதும் செய்யல. எப்படியாவது கோவிலை அழிச்சுடனும், கோவிலில் இருப்பதையெல்லாம் எடுத்துவிடனும் என கோணிச்சாக்கை போட்டுக்கிட்டு, கஜினி முகமது போல போனாங்க.

அதையும் நீதிமன்றம் சட்டவிரோதம் என நிறுத்தியுள்ளது. அதனால் நான் சொல்கிறேன்…. தயவு செய்து நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்….  இதுவரை இவர்கள் எல்லாமே செய்தது பொய்யானது, போலியானது, பிரிவினைவாதத்தின் அடிப்படையில் வந்தது, உண்மையின் அடிப்படையில் இல்லாதது என்பதை இப்போ நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் 470, 520, 600க்கு மேல மதிப்பெண் எடுத்து நீட் பற்றிய பிதற்றல்கள் பொய் என்று மாணவ செல்வங்கள் நிரூபித்து இருக்கின்றார்கள். அதனால் எதிரியை தேடி தேடி செல்வதை போல தமிழக அரசாங்கம் இந்த மாதிரியான ஆக்கபூர்வ விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |