பாஜகவில் இணைந்துள்ள திமுக எம்எல்ஏ சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று இரண்டு வருடம் எம்எல்ஏவாக உள்ளேன். திருப்பரங்குன்றம் தொகுதியில் இப்போ போய் கேட்டாலும் கூட சுயேட்சையாக போட்டியிடுங்கள் நாங்கள் ஜெயிக்க வைக்கின்றோம் என தாய்மார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதைபெருமைக்காக சொல்லவில்லை. மக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் இருந்தேன். கட்சி தலைமை கொடுப்பதெல்லாம் சைலன்ட்டான டார்ச்சர். நான் படிச்ச்சு டாக்டராக இருக்கேன். எல்லாத்தையும் அரவணைத்துப் போக வேண்டிய மனநிலை எனக்கு உள்ளது. எனவே என்னால் எதுவும் செய்ய முடியல. என்னுடைய அதிருப்தியை இரண்டாம்கட்ட தலைவர்களிடம் சொல்லியுள்ளேன். அவர்கள் விசாரணை செய்தார்கள்.
மாவட்ட செயலாளர் ஆதிக்கம் திமுகவில் அதிகமாக கோலோச்சி இருக்கின்றது. நிறைய பேருக்கு அது மனதளவில் பாதிப்பை கொடுக்கின்றது. அட்ஜஸ்ட் பண்ணி போடறாங்க நிறையா பேர் இருக்காங்க. நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. சேவை செய்வதற்கு தான் அரசியலில் இருக்கின்றேன். அதற்க்கு இடையூறு இருக்கிறது, அதனால் நான் வெளியே வந்துட்டேன். முக முக.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஸ்டாலினை ஏதும் குறை சொல்ல முடியாது.