Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினை பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்… வைரல் வீடியோ…!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை.

வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் அந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடல் ஒன்றை பாடி முதல்வர் முக ஸ்டாலின் கலாய்த்த வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சு அண்ணே எனப் பாடி போராட்டம் நடத்தினார்.

Categories

Tech |