Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் அப்பா காலத்தில் இருந்து….! இப்படி தான்…. எங்க நடந்தாலும் நாங்கதான்னு சொல்லுறீங்க ?

அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக கட்சி தொடக்கத்திலிருந்து….  ஸ்டாலின் அவர்களுடைய அப்பா காலத்தில் இருந்து இந்த இரண்டு சமுதாயமும் சேரக்கூடாது, இரண்டு சமுதாயமும் பிரித்துவிட்டால் தான் அவர்கள் அரசியல் பிழப்பு நடத்த முடியும்.

ஏனென்றால் இரண்டு சமுதாயம் சேர்ந்துவிட்டால் அவருக்கு அரசியலில் வேலை கிடையாது. இதனால் இளைஞர்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் வந்து இருக்கிறது. அவர்களுக்கு படிக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனால் படிக்க முடியாது. வேலைக்குப் போக வாய்ப்பு இருக்கிறது, ஆனால் வேலைக்கு போக முடியாது. ஏனென்றால் வழக்கு இருக்கிறது.

அதனால் அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் நாசமாக்கி கொண்டு இருக்கிறார். வன்னியர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வரை கொலை செய்துவிட்டார்கள் என்று தலைப்பில் போடுகிறீர்கள். என்ன காரணம் ?ஏன் உங்களுக்கு ஒரு ஜாதி கலவரம் வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா ? இது தான் பத்திரிகை தர்மமா ? இது தான் பத்திரிக்கைத்துறையா ? இதற்க்கு பதில் வேறு ஏதாவது தொழில் பண்ணி விட்டு போய்விடலாம்.

ஜப்பானில் பிரச்சனை என்றால் உடனே அதற்கு பாட்டாளி மக்கள்தான் காரணம். அதான் சொல்லிக்கொண்டே இருக்கிறார். சைனாவில் பிரச்சனை என்றால் அதற்கும் பாட்டாளி தான் காரணம். தமிழ் நாட்டிலேயே தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அதிகமாக செய்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். அது நிறைய பேருக்கு தெரியுமா என்று தெரியாது. ஏனென்றால் ஊடகங்களில் இதெல்லாம் வராது. அம்பேத்கர் சிலையை உருவாக்கியது, நிறுவியது யார் என்றால் மருத்துவர் ஐயர் தான்.

குடிதாங்கியில் தலித் பிணத்தை தோளில் சுமந்து அடக்கம் செய்தது மருத்துவ ஐயர் அவர்கள் தான். நான் அமைச்சராக இருந்த இடத்தில் ஆல் இந்தியா நுழைவு தேர்வில் தலித் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தது நான்தான். யுஜியில்  மட்டுமல்ல பிஜி யிலும் கொண்டு வந்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டு, எவ்வளவு எதிர்ப்புகள் மீறி அதை நான் கொண்டு வந்து கொடுத்தேன் என அன்புமணி விளக்கினார்.

Categories

Tech |