மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான எந்த முன்னேற்பாடுகளையும் திமுக அரசு செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வானிலை மையம் தகவல் தரும் தேவையான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்யத் தவறியதால் மழை நீர் தேங்கி உள்ளதாக கூறினார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்ய தவறி விட்டது எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் எழுவர் விடுதலை வழக்காரத்தில் அரசியல் ஆதாயம் மு.க. ஸ்டாலின் நாடகமாடி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.