புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் ஸ்டாலினின் ரகசிய திட்டம் குறித்து பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில அரசின் பங்கும் வேண்டும். எனவே சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக ஆளுங்கட்சி ‘மாநில சுயாட்சி’ என்ற பெயரில் துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் ஆளுநரின் அதிகாரங்களை கையாண்டு குடும்ப சொத்தாக பல்கலைக்கழகங்களை மாற்ற ஏதாவது சதி செய்தால் அது நடைமுறையின் தொடக்கத்திலேயே நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஸ்டாலின் அவர்களே…. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்யும் ஆளுநரின் அதிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். உங்கள் குடும்ப சொத்தாக தமிழக பல்கலைக்கழகங்களை மாற்றி மேலும் ஊழலை சேர்க்க நினைக்காதீர்கள் என்று கூறி பரபரப்பு அறிக்கை ஒன்றையும் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார்.