Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் அவர்களே…! நாங்க கெத்து… உங்களை போல அல்ல…. காலரை தூக்கி விட்ட எடப்பாடி …!!

திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, கிராமப்புறத்தில் இருக்கின்ற வேளாண் பெரு மக்கள் வேளாண்மையை மேற்கொள்வதற்காக அங்கே இருக்கின்ற கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடனை பெறுகின்றார்கள். இதுதான் எதார்த்த உண்மை. வேளாண் பெரு மக்கள் புயலால் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் கொடுக்கின்றோம். தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டாலும் பயிர் சேதத்திற்கு கணக்கிட்டு நிவாரணம் அளிக்கின்றோம்.

வறட்சி ஏற்பட்டாலும் நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அரசாங்கம். தமிழக வரலாற்றிலே வறட்சிக்காக நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அம்மாவுடைய அரசு. எப்பொழுதும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ… அப்பொழுதெல்லாம் அம்மாவுடைய அரசு நேசக்கரம் நீட்டி அவர்களை தூக்கி விடுகின்ற அரசாக எங்களுடைய  அரசு இருந்து கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் அவர்களே… உங்களை போல எங்கள் அரசு அல்ல. திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் விவசாயிகளில் பம்பு செட்டுக்கு மின்கட்டணம் ஒரு யூனிட்க்கு ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடைபெற்ற பொழுது அந்த விவசாயிகளை துப்பாக்கி சூடு நடத்தி, சுட்டு வீழ்த்திய கட்சி திராவிட முன்னேற்ற கழக கட்சி. இதை விவசாயம் எப்போதும் மறக்க மாட்டாங்க.

துப்பாக்கி சூட்டில் இறந்த  குடும்பத்திற்கும் உதவி செய்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தார்கள். இன்றைக்கு வேளாண் பெரு மக்களுக்காக குரல் கொடுத்துக்  மறைந்த ஐயா. நாராயணசாமி நாயுடு அவர்களுக்கும் மணிமண்டபம் அமைத்தோம். நானே நேரடியாக போய் மணிமண்டபத்தை திறந்து வைத்தேன். விவசாயிகளை கௌரவப்படுத்துவதற்காக அவருக்கு அரசு விழா எடுக்கின்றோம். வேளாண் பணி என்பது கடுமையான பணி.

வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் இரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்ற பணி வேளாண் பணி. ஆகவே அந்த பணியை நாம் போற்ற வேண்டும், பாராட்ட வேண்டும், ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுதுதான் வேளாண்மை உற்பத்தி பெருகும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தானும் ஒரு விவசாயி என்று  பெருமையோடு சொல்லிக் கொண்டார்கள். விவசாயிகள்  பெருமைக்குரியவர், தன்னலம் பாராமல் உழைக்கக்கூடியவர்கள். நாட்டுக்கு உணவு கொடுக்கின்றவர்கள் என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |