நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சுதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, தமிழகத்தில் தான் இந்தியாவிலே கொரோனா பரிசோதனைகள் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் WHO,ICMR,மத்திய அரசு,சுகாதாரத்துறை,போன்றவை பாராட்டத்தக்க விசயமாக நாம் இதுவரை 12,35,692 சோதனைகளை செய்திருக்கிறோம். நம்மைவிட பெரிய மாநிலமான மஹாராஷ்டிராவில் 9,95000, கேரளாவில் 2,39000, கர்நாடகா 6,37000 சோதனைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டிலையே அதிக சோதனைகளை மேற்கொண்டு மேலும் 10,00,000 கிட்களை பெறவும் ஆணைகளை பிறப்பித்துள்ளனர்.
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் நமது அரசு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாநில அரசின் நிதியில் இருந்து மொத்த டெஸ்ட்க்கான 93% கிட்களை வாங்குவதற்காக நிதித்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளார். வீடு திரும்பும் நபர்களின் எண்ணைக்கையானது 57% ஆக உள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நபர்களையும் பாதுகாத்து வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது நம் அரசு.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு ஜிங்க் வைட்டமின் மாத்திரை,கபாசுர குடிநீர்,போன்ற immune booster இவற்றை வழங்கி அவர்ளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைளை வழங்கி வருகிறது.
1.முக.ஸ்டாலின் நியாயவிலை கடைகள் மூலமாக மக்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் முதலமைச்சர் ஏற்கனவே 15 நாள்களுக்கு முன்னதாகவே குடும்ப அட்டைதாரர் அத்தனை பேருக்கும் முகக்கவசம் வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்த செய்தி ஆகும்.மேலும் சென்னையை பொறுத்தமட்டில் குடிசைப்பகுதிகளுக்கு 50,0000 முகக்கவசம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு 46,000 reusable mask ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை உங்களுக்கு பதிவித்துக்கொள்கிறேன்.
2.கள பணியாளர்கள் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அளித்திட வேண்டும் என்று ஆலோசனை விதித்திருந்தார்.
ஏற்கனவே முதலமைச்சர் அவர்கள் களத்திலே இறங்கி செயல்படுகிற அணைத்து கள பணியாளர்களின் பாதுகாப்பு என்பது நமது முதல் கடமை என்று அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
3.முன்கள பணியாளர்களுக்கு உண்டான நிதியை வழங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்பாகவே முதலமைச்சர் அவர்களின் சிந்தனையில்தோன்றி நிதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
4.சோதனை குறித்த விவரங்களை விமான நிலையங்கள் வாயிலாக மருத்துவமனை வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார்.
ஏற்கனவே கப்பல்,விமானங்கள் மூலமாக வரக்கூடிய நபர்களை பரிசோதித்து பாசிட்டிவ் கேஸேஸ் மற்றும் quarantine கேஸேஸ் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் நாம் தினமும் கூறிக்கொண்டிருக்கிறோம்.
இதற்கிடையில் ஒரு ஆங்கில செய்தி ஊடகத்தில் மாநில வாரியாக கணெக்கெடுப்பில் நமது மாநிலம் இந்தியாவிலே முதல் மாநிலமாக வெளிப்படையாக கருத்துக்களை வெளிப்படுத்தும் மாநிலமாக உள்ளது. இரண்டாவதாக கர்நாடக மாநிலம் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.இந்த அளவுக்கு ICMR,மத்திய அரசு போன்ற அனைவரிடமும் பாராட்டு பெறக்கூடிய மாநிலமாகவும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகவும் நம் மாநிலம் உள்ளது.