Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் உடல்நிலை….. மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!

காவிரி மருத்துவமனையில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக கடந்த 14ஆம் தேதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா அறிகுறி, பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதனால் இன்று பிற்பகல் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |