Categories
அரசியல்

ஸ்டாலின் ஒரு ஹீரோ…! எங்களுக்கு பெயர் வேண்டாம்… பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை …!!

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை அனைத்து மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டத்தில் பெயர் எல்லாம் எடுக்கல, பெயர் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். அந்த பெயரை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். திட்டத்தை முழுமையாக கொண்டு போய் சேர்த்துவிடுங்கள். ஏனென்றால் ஒரு ஒரு திட்டமே கஷ்டப்பட்டு கடைகோடி தமிழன் நன்றாக இருக்கவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட திட்டம். அதில் வந்து முறையாக பண்ணவில்லை என்று தான் இத்தனை நாள் குற்றச்சாட்டு.

இப்ப வந்து வெளிப்படையாக நம்முடைய முதல்-அமைச்சர் ஏற்றுக் கொண்டார் என்றுதான் பார்க்கிறேன். அதேபோல திஷா என்றுசொல்லிட்டு ஒரு குழு உள்ளது. கலெக்டர் ஆபீசில் எம்பிக்கள், அங்கு இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எல்லாம் சேர்ந்து அந்த ப்ராஜெக்ட் கரெக்டா வருகிறதா ? கரெக்டா போகுதா ?  என்று பார்க்க வேண்டும்.

அதையும் கூட தமிழகத்தில் விரைந்து முதலமைச்சர் கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அதையும் கூட கரெக்டாக அமைத்து, வேகமாக ரிவிவ் பண்ணி, கடைகோடி மக்கள்கிட்ட வேகமாகக் கொண்டுபோய் சேர்க்கணும். அப்படி செய்தால் நானே பிரஸ் மீட் போட்டு முதலமைச்சர் சூப்பர், முதலமைச்சர் சூப்பர் ஹீரோ எல்லாம் நான் சொல்கிறேன். அது மட்டும் தான் எனக்கு வேண்டும். முதலமைச்சரை ஹீரோ என்று சொல்வதில் எனக்கு எந்த ஒன்றும் கிடையாது. ஆனால் எங்களுடைய திட்டங்களை முறைப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும், அரசியல் கார்புனர்ச்சி இல்லாமல் என அண்ணாமலை தெரிவித்தார்.

Categories

Tech |