Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கடிதம் எழுதுனா என்ன ? எழுதாவிட்டால் என்ன ? எல்லாம் பாஜக பார்த்துக்கிடும் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, அடுத்ததாக லீனா மணிமேகலை. இந்து விரோத கிறிஸ்தவ மதவெறி கொண்ட லீனா மணிமேகலை, மாகா காளி சிகரெட் பிடிக்கிற மாதிரி படம் போட்டு போஸ்டர் போட்டு உள்ளார்கள்.

இன்றைக்கு ஒட்டாவியாவில் இருக்கக்கூடிய கனடா இந்தியன் ஹை கமிஷன், கனடா அரசாங்கத்திற்கு இந்த நிகழ்ச்சியில் அந்த போஸ்டரோ, அது மாதிரியான அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று கேட்டுள்ளது.

அதை எப்படி சந்திப்பது என்று எங்களுக்கு தெரியும், ஆனால் அந்த இந்து விரோதியும் நிரந்தரமாக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  ஸ்டாலினுடைய கட்சி, திமுக ஆட்சியில் இருந்தபோது 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்,

இப்போ அது மாதிரி எல்லாம் நடக்கவில்லை, அதோடு மட்டுமல்ல ஒரு முறை விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கும்போது அன்றைக்கு வெளியூர் அமைச்சராக இருந்த சகோதரி சுஷ்மா சுராஜ் அவர்கள் சொன்னார்கள், இன்றைக்கு கைது செய்து இருக்கிறார்கள்.

நான் நிச்சயமாக வெளிய கூட்டிட்டு வந்துருவேன் அவர்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் வந்து எல்லையை கடந்துபோயிருக்கிறார்கள் போல இருக்கு கொண்டு வந்து விடுவேன் என்று…  எப்போதுமே இந்த மாதிரி கைது செய்தால் நாம் கொண்டு வந்து விடுவோம். ஸ்டாலின் கடிதம் எழுதினாலும் சரி,  எழுத விட்டாலும் சரி என தெரிவித்தார்.

Categories

Tech |