அதிமுக ஒன்றிய தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற எந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தனர். ஆனால் அதை மீறி மூத்த நிர்வாகிகள் மேடையில் கூச்சலிட்டனர். அப்போது ஒற்றை தலைமை விவகாரம் பற்றி பேசப்பட்டதை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பொதுக்கூட்டம் நடத்த விட கூடாது என்பதில் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளது. அதே நேரத்தில் இன்னும் பத்து நாட்களில் உள்ள நிலையில் சட்ட சீக்கல்கள் வந்து விடக்கூடாது என்பதில் இபிஎஸ் தரப்பு கவனமாக இருக்கிறது.
இந்நிலையில் அதிமுகவில் நடைபெறும் இந்த கலவரத்தில் டெல்லிக்கு ஒரு ரோல் இருக்கும் நிலையில் மாநிலத்தின் ஆட்சியில் இருக்கும் திமுக அரசுக்கு ஏதேனும் ரோல் இருக்கிறதாம்?, அதை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை அறிய கட்சியின் செல்வாக்கு மிக்க உடன்பிறப்புகள் சிலரிடம் விசாரித்தோம். இதில் ஜூலை 23ஆம் தேதி பொதுக்குழுவிற்கு முன்பாக ஓபிஎஸ் தரப்பு முதல்வரை தொடர்பு கொண்டது. அதாவது ஒ.பி. ரவிச்சந்திரநாத் மூலம் லேகா சுபாஷ்கரனை பிடித்து அவர் மூலம் ஸ்டாலின் மருமகன் சபரீசனை தொடர்பு கொண்டு முதல்வர் காதில் பொதுக்குழுவை நடத்த விடாமல் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளது என்று ஹஸ்கி வாய்ஸில் கூறுகின்றனர். இதனை முதல்வர், தனக்கு நெருக்கமான அமைச்சர் சகாக்களிடம் கூறினார்.
அதற்கு, ஓபிஎஸ்க்கு அந்த அளவுக்கு ஆதரவு இல்லை அவர் பின்னால் பாஜக இருக்கிறது என்பதால் இதில் நாம் வேடிக்கை மட்டும் பார்க்கலாம் என்று சிலர் கூற முதல்வரும் சரி என்று கூறி இருந்து விட்டார். இந்நிலையில் மீண்டும் ஓபிஎஸ் தரப்பு முதல்வரை மறைமுகமாக தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகழேந்தி அண்மையில் முதல்வர், தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறைச் செயலாளர், வருவாய் துறை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 50 பேருக்கு மேல் கூடும் அனைத்து கூட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் பொதுக்குழுவுக்கு கொரோனாவை காரணம் காட்டியது தடை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார்.