Categories
அரசியல்

ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுனா பலமானவரா ? நோஸ்கட் செய்த அண்ணாமலை ….!!

சைக்கிள் ஓட்டினால் ஸ்டாலின் பலமானவரா என பாஜக தலைவர் அண்ணாமலை கலாய்த்துள்ளார்.

பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருணாநிதியை விட ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது ராஜா அண்ணாவின் தனிப்பட்ட கருத்து. எதற்காக கருணாநிதி அவர்களை விட ஸ்டாலின் அவர்கள் ஆபத்தானவர் என்று ராஜா அண்ணன் சொல்கிற கருத்து  புரிந்து கொள்கிறேன் என்றால்…. ஸ்டாலின் அவர்கள் சுயமாக இயங்கவில்லை என்று சொல்கிறார்.

அவரை வேற ஒரு லாபி, வேற ஒரு குரூப் ஆப்ரேட் செய்கிறது என்று சொல்ல வருகிறார், அது மிகவும் ஆபத்து. கருணாநிதி அவர்களை பொருத்தவரை சொந்தமாக மூளையை பயன்படுத்தி மனிதன் வேலை செய்கின்ற பொழுது எதிர்க்க முடியும். ஆனால் உங்களின் சார்பாக வேறு ஒருவர் குழு வெளியே அமர்ந்து கொண்டு….

நிறைய கும்பல் இப்போது தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. மத கலவரத்தை விதைக்க…. அந்த அடிப்படையில்தான் கூறி இருக்கிறார். அதனால் இதை தமிழகத்தில் இருக்கக்கூடிய சில கட்சி சார்ந்த ஊடகங்கள் பாஜக அஞ்சுகிறது. பாஜக யாரை பார்த்தும் அஞ்சவில்லை. பலமான சக்தியாக ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என்றால் கண்டிப்பாக நான் ஒத்துக்க மாட்டேன்.

போலீஸ் ஸ்டேஷன் போறதுக்கு முன்னாடி ஒரு நாற்காலியை போட்டு புதுசா ஒரு துண்டை போட்டு அவர்கள் கட்சி நடத்துகின்ற தொலைக்காட்சியின் மைக் வைத்துக்கொண்டு அங்கே நான் திடீரென கண்காணிக்கப்போறேன், யாருக்கும் சொல்லாமல் போனேன் என்பதை எப்படி ஏத்துப்பீர்கள், அதே போல நான் சில விடுதிகளுக்கு போய் விசிட் செய்கிறேன் என்று சொல்லுறதுக்கு முன்னாடி அங்கு தேவையான மைக், கேமரா, லைட் எல்லாம் செட் பண்ணிட்டு போகிறார்.

அதே சைக்கிள் ஓட்டுவது என்று சொல்கிறார்கள், போற அத்தனை கிலோமீட்டர் சைக்கிளுக்கு 1000 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு போட்டு ஈ.சி.ஆர் சாலையில் காலையில் யாருமே வர முடியாத அளவிற்கு டிராபிக் திண்டாட்டம் தான் வருகிறது. இதையெல்லாம் செய்வதால் ஒரு முதலமைச்சர் பலம் வாய்ந்தவர் என்று சொல்லமுடியாது. முதலமைச்சர் பலமாக இருந்தால் தமிழ்நாட்டிலே நம்முடைய விவசாயம் என்பது நீர்த்துப் போய்விட்டது. அதற்கு வேலை செய்து கொடுக்கவேண்டும். அதேபோல தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை வலிமை படுத்துவதற்கு பாடுபடனும்.

இதையெல்லாம் செய்யணுமோ தவிர போட்டோ ஆப் செய்துவிட்டு அதை அவர்களே சொந்தமாக சமூகவலைதளம் வைத்துக்கொண்டு பிரமோட் பண்ணிக்கொண்டு, அவர்கள் சொந்த டிவியில் சாதனை என்று போட்டுவிட்டு இதன் மூலமாக பலம் வாய்ந்துவிட்டார் என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

Categories

Tech |