செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, மாண்புமிகு முதலமைச்சரும் சொன்னார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியும் சொன்னார். கூட்டுறவு வங்கியில் போய் கடன் வாங்குங்கள், நாங்கள் வந்து கடனை தள்ளுபடி செய்து விடுவோம், நம்ம அரசு வந்த உடனே கடனை தள்ளுபடி செய்து விடுவோம் என்று கூறினார்கள்.
இப்ப என்னவென்றால் அதில் பல்வேறு விதிகளை விதிக்கிறார்கள். ரேஷன் கடையில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு தான் தருவோம் மற்றவர்களுக்கெல்லாம் இல்லை. அப்படி என்று பல்வேறு விதிகளை விதிக்கிறார்கள். இது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. மக்கள்தான் எஜமானர்கள், மக்கள் இந்த ஆட்சியில் பல அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போ மின் தடை இருக்கிறது. இது மட்டும் இல்ல உங்களுக்கு தெரியும். இந்த ஆட்சி வந்தபிறகு ஆட்சியாகவே இல்லை, இதுவரைக்கும் சட்டமன்ற தொகுதி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை இன்னும், எங்களுக்கெல்லாம் நிதி ஒதுக்கியே கொடுக்கவில்லை. பழைய நிதியிலிருந்து நாங்கள் கட்டப்பட்டதை எல்லாம் திறந்து கொண்டிருக்கிறோம், சிலதுக்கு பூமி பூஜை போட்டுக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.