சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை இடமான கமலாலயத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பெட்ரோல் குண்டு மர்ம நபர்கள் சிலரால் வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அலுவலக செயலாளர் சந்திரன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் கருக்கா வினோத் பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் பேச்சு உற்சாகமடைந்து தான் பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர் என பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். மேலும் பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு கோரப்படும். எனவும் அவர் கூறியுள்ளார்.