செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, நம்ம உணவு துறை அமைச்சரிடம் தான் இதை சொல்ல வேண்டும். இந்த அரிசி கொண்டு போய் காமிங்க 5 கிலோ பச்சரிசி கொடுத்தால், புழுங்கல் அரிசி 15 கிலோ தரமாட்டேன் என்று ரேஷன் கடையில் சொல்கிறார்கள், பாமாயில் தர மாட்டேங்குறார்கள் இது மாதிரி இருக்குனு இங்கே சத்தியமூர்த்தி நகர் ரேஷன் கடையில் இருக்கின்ற பணியாளர் செய்கிறார் என்று கூறியுள்ளார்கள்.
பொருட்களையும் கடத்துறாங்க, அரிசி தரமற்றதா இருக்கா ? அரிசி சாப்பிடுவது போல் இருக்கா ? இதை அமைச்சரிடம் கேட்டால் நாங்க நல்ல அரிசி தான் கொடுக்கிறோம், முதலைமைச்சர் கூறியிருக்கிறார் என்று சொல்கிறார், இதை நீங்கள் தான் கொண்டு போய் அவரு பார்வைக்கு உணவுத்துறை அமைச்சருக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும் போய் சொல்லவேண்டும் என தெரிவித்தார்.