Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஸ்டாலின் தான் முதலமைச்சர்…. மதுரை வடக்கு தொகுதி வேட்பாளரின் ஆவேச பேச்சு…. அனல் பறக்கும் பிரச்சாரம்….!!

மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் அவர்கள் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வடக்கு தொகுதியில் நிற்கும் திமுக வேட்பாளரான கோ. தளபதி, அவரது தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கே.கே நகர் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க செல்லும்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது அவர் பேசுகையில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆவார் என்றும், அவர் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நான் இத்தொகுதியில் நிறைவேற்றுவேன் என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நான் போட்டியிடும் மதுரை வடக்கு தொகுதி முதன்மைத் தொகுதியாக்குவது தான் எனது லட்சியம் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் இவர் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது அவருடன் சில முக்கிய பிரமுகர்களும் உடன் இருந்தனர்.

Categories

Tech |