நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தேவர் ஐயாவுடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிமுக தலைவர்கள் வருகிறார்கள். வழக்கமாக எப்பொழுதுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாலை அணிவிப்பது வழக்கமான ஒன்று. அதிகாலையிலேயே மாலை அணிவித்துவிட்டு ஐயாவுடைய நினைவிடத்திற்கு மரியாதை செய்வது எங்களின் வழக்கம்.
அதே போல மதுரையில் இருக்கிற தேவர் ஐயாவுடைய திருவுருவ சிலை பல்லாண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு வானுயர அளவுக்கு இருந்த அந்த ஏணிப் படியேறி மாலை போடுவது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது. அந்த படிகள் எல்லாம் மாற்றி ஐயா அவர்களுக்கு யார் வந்தாலும் சிறப்பாக மாலை அணிவித்துவிட்டு எந்தவித பதட்டமும், பயமும் இல்லாமல் மாலை அணிவித்துவிட்டு செல்கிற அளவுக்கு ஏற்பாடு செய்து புதுப்பித்தது அம்மாவினுடைய அரசு.
மாண்புமிகு அம்மா அவர்கள் அதை செய்தார்கள். அதைத் தொடர்ந்து இப்பொழுது நாங்கள் செய்து இருக்கும். அதே மாதிரி ஐயாவுடைய திருவுருவச்சிலை உள்ள பசும்பொனில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒப்பாரும், மிக்காரும் தலைவர் எங்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களை பெற்றெடுக்காத தாய் ஒன்றரை கோடி தொண்டர்களுடைய இதய தெய்வமாக காட்சி அளிக்கின்ற அம்மா அவர்கள் பதின்மூன்றரை கிலோ தங்கத்தால் ஆன கவசத்தை செய்து கொடுத்தார்கள்.
அந்த கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பசும்பொன்னுக்கு நாங்கள் எப்பொழுதும் சென்று வழக்கமாக வழிபடுவது வழக்கம். அதைத்தான் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எங்களுக்கு விரைவாக மரியாதையை செலுத்த அனுமதி கொடுத்தால் நல்லது. அவ்வாறு கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் இங்கு அணிவித்துவிட்டு அங்கேயும் சென்று வருவோம் என்று கூறியுள்ளோம்.
மாண்புமிகு முதல்வர் வருவதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே அவர்கள் வருவது கால தாமதமானால் எங்களுக்கு முன்னாள் மாலையிடுவதற்கு அனுமதி கிடைக்குமா ? என்பதை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சொல்லியுள்ளோம். மாவட்ட ஆட்சியர் என்ன சொல்கின்றாரோ? காவல்துறை ஆணையாளர்கள் எந்த மாதிரி வழிகாட்டுதல் கொடுக்கிறார்களோ? அந்த அடிப்படையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாலை அணிவித்து செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.