தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியுள்ளது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின்.
இந்நிலையில் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர். பாஜக சார்பில் கணேசன், காங்கிரஸ் சார்பில் கே எஸ் அழகிரி, திருநாவுக்கரசு மற்றும் வைகோ, திருமாவளவன், சிதம்பரம், முத்தரசன், காதர் மெய்தீன், வீரமணி, வேல்முருகன், ஈஸ்வரன் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.