முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை நேற்று மாலை 4 மணி அளவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது அதில் பங்கேற்ற காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியதாவது, “13 வயதில் இருந்தே அரசியலில் உழைத்து வருபவர் முதலமைச்சர் ஸ்டாலின். உழைக்கும் வர்க்கத்தினர் ஸ்டாலினை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். தமிழக மக்களுக்கு முதல்வர் பற்றி எல்லாம் தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்களின் மனநிலையை என்னவென்று நாடே அறிந்திருக்கும். காஷ்மீர் பிரச்சனையில் எங்களுக்கு தோலுக்கு தோளாக நின்றவர் ஸ்டாலின் அவரை ஒருபோதும் காஷ்மீர் மக்கள் மறக்க மாட்டார்கள்.
பல்வேறு கொள்கைகள் இந்தியாவில் பரவி கிடக்கின்றன. வேற்றுமை என்பதுதான் இந்தியாவின் சிறப்பு காஷ்மீர் மற்றும் தமிழகத்திற்கான உறவு பல தலைமுறைகளை கடந்தது.!” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய பிரனாயி விஜயன் இளைஞரணி தலைவராக இருந்து பின்னர் மாநில தலைவராக மாறி தற்போது முதலமைச்சராக உயர்ந்துள்ளார் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகம் தமிழ் சமூகத்தின் வரலாற்றை கூறுவதாக உள்ளது. அதோடு முதல்வருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.!” இவ்வாறு அவர் கூறினார்.