பாஜகவினர் வெளியிட்ட தமிழணங்கில் “ஸ” என்ற ஆங்கில எழுத்தை குறிப்பிட்டதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் தமிழ் என முழக்கமிடும் முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
“ஸ” வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தை கண்டுபிடிக்க அரசு உடனடியாக குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வலியுறுத்தியுள்ளார்.