சென்னை, சேப்பாக்கம் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்கிறார். காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எதிர்கட்சித் தலைவர் EPS உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயரும்.
இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் ஸ்டாலின் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதால் அனைத்து வரிகளையும் ரத்துசெய்ய வேண்டும் என செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், மன்னராட்சி காலத்தில் இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது, குறுநில மன்னர்களுக்கு வரி விலக்கு அளிப்பார்கள். அதுபோல உதயநிதி அமைச்சராக பதவியேற்பதால் சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை ரத்து செய்து மக்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.