Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் மருத்துவமனையில் நிரம்பிய 95% படுக்கைகள்… வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்…!!

ஸ்டாலின் மருத்துவமனையில் 95 சதவீத படுக்கைகள் நிரம்பி விட்ட காரணத்தினால் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 சதவீத படுகைகள் மட்டும் மீதம் இருப்பதால் இரவு நேரங்களில் வருபவர்களுக்கு படுக்கை ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதாக கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

Categories

Tech |