Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் மீதான வழக்குகள்… சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 4 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் மீது 12 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கு மீது பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகளில் 4 வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, “பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை ஏற்கும் சகிப்புத்தன்மை வேண்டும்.

தனிப்பட்ட விமர்சனங்களை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டு எஞ்சிய எட்டு வழக்குகள் விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 4 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது திமுகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |