தமிழகத்தில் மொத்தம் நான்கு முதல்வர்கள் உள்ளனர் என்று எடப்பாடி பழனிச்சாமி பகிர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக செங்கல்பட்டில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது: “மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒரு முதலமைச்சர் மட்டும்தான் இருப்பார்கள்.
ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் நான்கு முதலமைச்சர். ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர், அவருடைய மருமகன், மகன், மனைவி இவர்கள்தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறார்கள். குடும்ப அதிகார மையமாக திமுக திகழ்கின்றது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.