ஸ்டாலின் வேலை கையில் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என்று முதல்வர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் முதல்வர் பழனிசாமி, “ஸ்டாலின் கையில் வேலை எடுத்துவிட்டார். நான் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம் ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். மக்களின் வரவேற்பை பார்க்கும்போது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை மக்கள் மீண்டும் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிகிறது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தைப்பூசம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது என்றும் பேசியுள்ளார்.