நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆற்றல் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு மத்திய அரசு ஆக்சன் உற்பத்தி குறித்து நாளை விளக்கம் அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏப்ரல் 21 முதல் தமிழகத்திற்கு 1,35,500, புதுச்சேரிக்கு 5,100 ரெம்டெசிவிர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களில் பாகுபாடின்றி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.