Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல்…. மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்க்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டு வருகின்றது. எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்க தூத்துக்குடியில் ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா சிகிச்சைக்காக நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்து முன்னதாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு இன்று முதல் மீண்டும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதன்பிறகு டேங்கர் லாரிகளில் நிரப்பப்பட்டு இன்று மாலை வினியோகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |