ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் கட்டுப்பாடு இல்லை என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ஆக்சிஜனை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதி தான் தேவை. ஆக்சிஜன் தருகிறோம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இயக்க முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. இந்த முயற்சிக்கு தமிழக அரசு இடம் தரக்கூடாது என்று குற்றம் சாட்டியுள்ளார்.