Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க…. தமிழக அரசு எதிர்ப்பு…!!!

நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா  பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக மருத்துவமனைகளுக்கு வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு கோரியது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்து இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு பதில் நாடு முழுவதும் உள்ள வேறு ஆலைகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யுங்கள். ஆலையை திறக்க தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

Categories

Tech |