ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் தொடர்பான விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஆலை மூடப்பட்டு இருப்பதால் அங்கு இருக்கும் அபாயகரமான கழிவுகள் வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஆலையை இடிக்க கோரி சமூக ஆர்வலர் பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆலை வளாகத்தில் தேங்கிக்கிடக்கும் அபாயகரமான கழிவுகளால் அந்த பகுதியில் மண் மாசடைந்திருக்கிறது. அதனால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ஆலை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபாயகரமானதா இல்லையா? என்பதை கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு நடவடிக்கை என்பது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் நான்கு வாரங்களில் இது தொடர்பான விளக்கம் அளிக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்திற்கு வைத்துள்ளனர்.