Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கு – கேவியட் மனு தாக்கல் …!!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பு சார்பில்   உச்ச நீதிமன்றத்தில்கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யார் யாரெல்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் களோ… அவர்கள் பெரும்பாலானோர் இன்றைய தினம் கேவியட் மனு தாக்கல் செய்து விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக அரசு கூட இன்றைய தினம் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய நிலையில் தற்போது முதல் கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆலை எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியாக சட்ட ரீதியான போராட்டங்களை நடத்தி வரக்கூடிய மக்கள் இயக்கம் சார்பாக  இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் கூட குறிப்பிட்ட மனுதாரரிடம் அழைத்துப் பேசி சில முக்கியமான வாதங்களை கேட்டு அதற்குப் பிறகுதான் உத்தரவு பிறப்பிக்க முடியும். எனவே கேவியட் மனு என்பது மிக முக்கியமானது.

Categories

Tech |