தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த மே 13ஆம் தேதி முதல் முதல் அலகில் 39 டன்னுக்கு மேல் ஆக்சிசன் உற்பத்தியாகும் நிலையில், தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் அலகில் நாளை முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தலா 500 மெகா டன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு ஆக்சிஜன் அலகுகள் உள்ளன.
Categories