Categories
உலக செய்திகள்

“ஸ்டோன் ஹெஞ்ச்”… தீர்க்க முடியாத மர்மங்கள்…. விடைதெரியாத புதிர்கள்…..!!!!!

இங்கிலாந்திலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன் ஹெஞ்ச் இன்றுவரை விளக்க முடியாத பல்வேறு மர்மங்களை தனக்குள் கொண்டுள்ளது. இந்த ஸ்டோன்ஹெஞ்ச் யாரால்?.. ஏதற்கு கட்டப்பட்டது என்பதுதான் பெரிய மர்மமாகவே இருக்கிறது. இதனிடையில் சிலர் இது தானாகவே உருவாகி இருக்குமோ என்றும் சந்தேகிக்கின்றனர். அந்த ஸ்டோன் ஹெஞ்சிலுள்ள ஒவ்வொரு கற்களும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், 7 மீட்டர் உயரமும் கொண்டு உள்ளது.

இந்த கற்கள் அனைத்தும் 250 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த மலைப்பிரதேசங்களில் இருந்து வெட்டி எடுத்துக்கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் வரலாறுகள் கூறுகிறது. இந்த ஸ்டோன்ஹெஞ்சை கட்டி முடிப்பதற்கு மொத்தம் 160 கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு எடைகொண்ட கற்களை மலைப்பிரதேசங்களில் இருந்து எவ்வாறு எடுத்துவரப்பட்டிருக்கும். மேலும் இந்த ஸ்டோன்ஹெஞ்ச் அமைப்பின் பின்னணி என்ன?, இது எதற்காக பயன்படுத்தபட்டது ஆகிய கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

 

Categories

Tech |