ஸ்பா என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா ? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பல மாநிலங்களில் ஸ்பா என்ற பெயரில் விபச்சார விடுதிகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தி விபச்சாரம் செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் ஸ்பாவுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் சோதனையின் பெயரில் பணம் பரித்து செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஸ்பா என்றாலே விபச்சார நிலையம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளது மேலும் மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் மட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.