ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் தலைமையில், ஆய்வாளர்கள் பாஸ்கர், கதிர்வேலு போன்றோர் கோவை மெயின்ரோடு, கருக்கன்காட்டூர் அருகில் அதி வேகமாக போகும் வாகனங்களை கண்டறியும் நவீன கருவியுடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் நோக்கி நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் அதி வேகத்தில் சென்ற 40 வாகனங்களை கண்டறிந்து, அதன் வாகன ஓட்டிகளிடமிருந்து மொத்தம் ரூபாய் 16 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.