தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வருகிறது. அதன்படி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அனைத்து கோவிட் தடுப்பு நடைமுறைகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.