ஸ்பெயினில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இரவு நேர கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூடுவதன் காரணமாகவே கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஸ்பெயினில் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரொ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பணிக்கு செல்வது மருந்து வாங்கச் செல்வது போன்றவற்றுக்கு பொது முடகத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஸ்பெயின் என அரசு தெரிவித்துள்ளது. பொது இடங்களில் ஆறு பேருக்கு அதிகமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பொதுமுடக்கம் 6 மாதம் வரை அமலில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.