Categories
தேசிய செய்திகள்

“ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு, வேகமா ஸ்கூலுக்கு வா”… பொய் சொல்லி பள்ளி முதல்வர் செய்த காரியம்… மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!!!

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்ற மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருபவர் கேஷா யாதவ். இவர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை வகுப்பு நடத்த உள்ளதாக கூறி விரைவில் பள்ளிக்கு வர கூறியுள்ளார். அவரின் பேச்சை கேட்டு அம்மாணவியும் சம்பவம் நடந்த தினத்தன்று சீக்கிரம் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் முதல்வர் மாணவியை அறைக்குள் அழைத்துச் சென்று சேரில் அமர வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகள் அத்தனையும் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கூறியுள்ளார்.

ஆனால் ஆசிரியர்கள் இதை வெளியில் கூற வேண்டாம் என்று அவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் நடந்த அத்தனையும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |