பொன்னியின் செல்வன் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் லீக்காகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ‘இவர்கள் ஸ்பைடர் மேன் அல்லது சூப்பர் மேன் அல்ல, கேமரா தொழில்நுட்ப கலைஞர்கள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.