Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்..! 142 கி.மீ வேகம்…. “ரத்தம் சொட்ட சொட்ட அப்படியே உட்கார்ந்த வீரர்”…. கட்டிப்பிடித்து நலம் விசாரித்த பாக் வீரர்… வைரல் வீடியோ..!!

நெதர்லாந்தின் பாஸ் டி லீடே பவுன்சரால் தாக்கப்பட்டதையடுத்து ரவுஃப் அவரிடம் நலம் விசாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பெர்த் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் குவித்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 6ஆவது ஓவரின் போது ஆல்-ரவுண்டர் பாஸ் டி லீட், காயம் அடைந்தார். இன்னிங்ஸின் ஆறாவது ஓவரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் வீசிய 5ஆவது பந்தை (பவுன்ஸ்) லெக்ஸைட்  அடிக்கும் போது பாஸ் டி லீட் ஹெல்மெட்டை தாக்கியது. 142 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்து தாக்கியதில் அவர் வலியால் துடித்து அப்படியே கீழே உட்கார்ந்தார். பின் பாகிஸ்தான் வீரர்கள் பக்கத்தில் வந்து அவருக்கு உதவினர்.

மேலும் அணி மருத்துவர்கள் உள்ளே வந்து பார்க்கும் போது ஹெல்மெட் கிரில் பட்டு வலது கண்ணின் கீழ்வெட்டு விழுந்தது.  ரத்தம் சொட்டியது.  இதையடுத்து அவர் ஆட்டத்தில் இருந்து விலகினார். லோகன் வான் பீக், முதலில் விளையாடும் XI இல் பெயரிடப்படவில்லை, அவருக்குப் பதிலாக மூளையதிர்ச்சி மாற்று வீரராக சேர்க்கப்பட்டார். பாஸ் டி லீட்

இந்த சம்பவம் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள், வீரர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பந்து பட்டவுடன் ஹாரிஸ் ரவுஃப் பக்கத்தில் சென்று அவரிடம் கேட்டார். அதனை தொடர்ந்து போட்டி முடிவடைந்த பின் இருவரும் சந்தித்து சிரித்துக் கொண்டு பேசினர். ஹாரிஸ் ரவுஃப் கட்டிப்பிடித்து அவரிடம் நலம் விசாரித்து நீங்கள் வலிமையுடன் திரும்பி வருவீர்கள்!’ என்று கூற அவரும் கண்டிப்பாக என்று சொல்கிறார்.. ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டை இது வெளிப்படுகிறது. இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பாஸ் டி லீட், தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்..

Categories

Tech |