மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் லைட் என்ற ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலைகளில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி விலையை அதிகரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்பொழுது மோட்டோரோலா நிறுவனமும் இதையே மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மொபைலில் பின்பற்றி உள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் 500 ரூபாய் அதிகரித்து மாற்றப்பட்டுள்ளது. எனவே இதனுடைய தற்போதைய சந்தை விலை 9499 ரூபாய் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் ,64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மீடியாடெடக் ஹீலியோ பி35 பிராசஸர், கேமரா பொருத்தவரையில் 8 எம்பி செல்பி கேமரா மற்றும் 16 எம்பி பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி , 10 வாட் சார்ஜிங் , டியூவல் சிம் ஸ்லாட், ரேடியன் பிளாஸ்டிக் பேக் மற்றும் கைரேகை சென்சாரும் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.