Categories
உலக செய்திகள்

ஸ்மார்ட் போன் விற்பனை…. ரியல்மி புதிய சாதனை….!!!!

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற சாதனையை ரியல்மீ நிறுவனம் படைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் 149 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை ரியல்மி நிறுவனம் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
இதையடுத்து “பத்து கோடி யூனிட்கள் எனும் இலக்கை எட்டவும், ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த இடத்தை பிடிக்கவும் எங்களுக்கு ஆதரவளித்த ரியல்மியின் இளம் வாடிக்கையாளர்களுக்கு நன்றி. எங்களின் அடுத்த இலக்கு 2022 வாக்கில் மற்றொரு 10 கோடி யூனிட்களும், 2023 இறுதியில் மேலும் 10 கோடி யூனிட்களையும் விற்பனை செய்வது தான்,” என ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்கை லி தெரிவித்தார்.

Categories

Tech |