Categories
மாநில செய்திகள்

ஸ்மார்ட் ரேஷன் அட்டை ஆன்லைனில் பெறுவது எப்படி?…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

குடும்ப அட்டைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. தற்போது தமிழகத்தில் சாதாரண ரேஷன் அட்டையை ஸ்மார்ட் ரேஷன் கார்டு என டிஜிட்டல் வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும், பழைய ரேஷன் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்றாலும், ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம். ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு வலைத்தளத்தை (TNPDS Website) அணுக வேண்டும்.

தமிழ்நாடு டிஜிட்டல் ரேஷன் கார்டு எப்படி விண்ணப்பிப்பது?

1. தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு வலைத்தளத்தைப் பார்வையிடவும்
2. “ஸ்மார்ட் கார்டு பயன்பாடு” (Smart Card Application) என்பதைக் கிளிக் செய்க
3. உங்கள் குடும்பத் தலைவர் மற்றும் முகவரி பற்றிய விவரங்களை உள்ளிடவும்.
4. குடும்ப உறுப்பினர் மற்றும் அவர்களின் அடையாள அட்டை விவரங்களை உள்ளிடவும்.
5. இப்பொழுது உங்கள் புகைப்படத்தை பதிவேற்றவும். உங்கள் போட்டோ 10KB அளவிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
6. உங்கள் புகைப்படங்கள் png, gif, jpeg, jpg கோப்புகளில் இருக்க வேண்டும்.
7. உங்கள் LPG கேஸ் விவரங்களை உள்ளிடவும்.
8. அடுத்து Submit என்பதைக் கிளிக் செய்க
9. விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், நீங்கள் குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள்.
10. இந்த குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட் கார்டின் நிலையை கண்காணிக்கலாம்.

 

ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 

1. ஆதார் அட்டை
2. வாக்காளர் அடையாள அட்டை
3. பான் கார்டு,
4. சமீபத்திய புகைப்படம்
5. சாதி / பட்டியல் சான்றிதழ்
6. வருமான வரி சான்றிதழ்
7. மின் ரசீது
8. எரிவாயு நுகர்வோர் பில்

Categories

Tech |