ஸ்ரீ நகர் பகுதியில் கோழிக்கு பறவை காய்ச்சல் வருவதை அடுத்து அங்குள்ள கோழிப்பண்ணையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த சில மாதங்களாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது ஸ்ரீநகரில் உள்ள கோழிப் பண்ணையில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கிருந்து கோழிகள் மாதிரியை ஆய்வு செய்தபோது பறவை காய்ச்சல் உறுதியானதை அடுத்து பறவைக்காய்ச்சல் உறுதியான பண்ணையை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீர் நெடுஞ்சாலையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியே இறக்குமதி செய்யப்படும் கோழி தொடர்பான பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.