கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போராட்டங்கள் கையெடுக்கப்பட்டு கலவரமாக மாறி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீமதியின் பிறந்த தினமான இன்று பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பெற்றோர்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதற்காக அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது . மேலும் ஸ்ரீமதியின் சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குடும்பத்தினர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் மாலை போட்டு அஞ்சலி செலுத்தி விட்டு அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு எதிரே மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.