ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த திருவிழா ராப்பத்து, பகல் பத்து என மொத்தம் 20 நாட்கள் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வான வைகுண்ட சொர்க்கவாசல் திறப்பு, பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை திறக்கப்படும்.
இந்நிலையில் இதற்காக திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வு தான் பரமபத வாசல் திறப்பு.. இதற்காக தான் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. விடுமுறையா ஈடு கட்டும் விதமாக 2ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 7ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.