Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்…. “காலை 6 – 9 மணி வரை பவர் கட்”…. ஆட்சியர் உத்தரவு..!!

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் களிமேடு அருகே நேற்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சோக சம்பவத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் திருச்சியில் சித்திரை திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். மேலும் தேரோடும் வீதியில் மரக்கிளைகள் வெட்டப்படுவதுடன் அனைத்து துறையினரும் கவனத்துடன் செயல்பட உத்தரவிட்டுள்ளார்..

Categories

Tech |